முச்சக்கர வண்டிகள் தொடர்பில் அண்மையில் அறிமுகப்படுத்தியிருந்த புதிய சட்டதிட்டங்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி தொடக்கம் நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஏற்கனவே, புதிய சட்டதிட்டங்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வௌியான போதிலும் நடைமுறைப்படுத்தப்படும் தினம் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. இந்நிலையில் எதிர்வரும் ஏப்தல் மாதம் தொடக்கம் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைவாக, பயணிகள் போக்குவரத்துக்கு பயன்டுத்தப்படும் அனைத்து முச்சக்கர வண்டிகளிலும் மீட்டர் பொருத்தப்பட்டிருத்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன் அனைத்து முச்சக்கர வண்டிகளிலும் சாரதி ஆசனத்திற்கு பின்புறமாக வாகனத்தின் பதிவிலக்கம், சாரதியின் பெயர், சாரதியின் புகைப்படம் என்பன காட்சிப்படுத்தப்படுதல் அவசியம்.
மேலும் குறுகிய பாதைகளை பயன்படுத்தி பயணிகள் போக்குவரத்தை இலகுவாக்க வேண்டும் என்றும் வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.