கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பினை வழங்க அனுமதி கிடைத்துள்ளது என்று கிழக்கு மாகாண விவசாயத்துறை அமைச்சர் கி.துரைசிங்கம் தெரிவித்துள்ளார்.
இவ்வனுமதியின் முதற்கட்டமாக கால மூப்பிற்கமைய வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்கட்சித் தலைவரின் ஏற்பாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவருடைய ஆலோசகரை சந்தித்து வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடினார். இக்கலந்துரையாடலில் மேற்கொண்ட தீர்மானத்திற்கமைய 2012ம் ஆண்டு பட்டப்படிப்பை பூர்த்தி செய்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கி, நியமனங்கள் வழங்குவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவர்களில் குறித்த ஒரு தொகுதியினருக்கு தகவல் தொழில்நுட்ப பயிற்சி வழங்குவதற்காக பயிற்சியாளர்களாக ஆரம்பத்தில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். பின்னர் தகுதி அடிப்படையில் நியமனங்கள் வழங்கப்படவுள்ளன என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட பட்டதாரிகளை சந்தித்த எதிர்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் அவர்களது பிரச்சினைக்கு இரு வாரத்தில் தீர்வு பெற்றுத்தருவதாக உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.கி