கிழக்கில் மேலும் 1500 நியமனங்கள் விரைவில்- ஆளுநர்

கிழக்கு மாகாணத்தில் மேலும் ஆசிரியர் நியமனங்கள் வழங்குவதற்கான தரவுகளை பெறும் நடவடிக்கை நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார்.

மூதூர் பிரதேச செயலக பிரிவின் நீனாக்கேணி மீள்குடியேற்றப்பட்டவர்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்விடயத்தை கூறியுள்ளார்.

பாடசாலைகளில் நிலவுகின்ற வெற்றிடங்களை நிரப்புவதற்காக சகல வலய கல்விப் பணிப்பாளர்களிடமும் தரவுகள் பெறப்படவுள்ளன. அதனூடாக ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவும் பாடசாலைகள் அடையாளங்காணப்பட்டு அவ்வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். அத்தோடு கல்வி மேம்பாட்டுக்காகவும் புதிய பல திட்டங்கள் வகுக்கபபட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435