கிழக்கு மாகாணத்தில் ஆயிரத்து 442 பட்டதாரிகள் ஆசிரியர்களாக இணைத்துக் கொள்ளப்பட உள்ளதாகவும் அவர்களுக்கான நியமனக்கடிதங்கள் எதிர்வரும் 25ம், 26ம் திகதிகளில் வழங்கப்படும் என்றும் மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார்.
அவர்களுக்கான நியமன கடிதங்கள் எதிர்வரும் சனிக்கிழமை திருகோணமலையிலும் ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பிலும் வைத்து வழங்கப்படவுள்ளது.
பட்டதாரி ஆசிரியர்களின் நியமனம் வழங்கல் தொடர்பான ஊடக சந்திப்பு நேற்று (22) ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றபோதே ஆளுநர் இவ்விடயத்தை தெரிவித்தார்.
நிரந்தர நியமனங்களை வழங்கக்கோரி பட்டதாரிகள் அண்மைக் காலமாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் , அவர்களில் ஆயிரத்து 442 பட்டதாரிகள் ஆசிரியர்களாக இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் நியமனத்திற்காக இடம்பெற்ற போட்டிப் பரீட்சையில் சுமார் 6000 பேர் தோற்றியிருந்தனர். அவர்களுள் 2 ஆயிரத்து 500 பேர் சித்தியடைந்தமை குறிப்பிடத்தக்கது