கிழக்கு அரச வெற்றிடங்கள் அடங்கிய ஆவணம் திரைசேரிக்கு கையளிப்பு

கிழக்கு மாகாணத்தில் உள்ள அரச நிறுவன வெற்றிடங்கள் தொடர்பான தகவல் அடங்கிய ஆவணம் திரைசேரி மற்றும் முகாமைத்துவ சேவை திணைக்களம் என்பவற்றிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தின் 37 கல்வி வலயங்களில் உள்ள வெற்றிடங்கள் தொடர்பான தரவுகள் தொகுக்கப்பட்டு ஆவணமாக நேற்று மாலை (30) திரைசேரியிடம் கையளிக்கப்படது என்று கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.டி.எ நிஸாம் தெரிவித்தார்.

மூன்று மாவட்டங்களை உள்ளடக்கியதாக ஆயிரம் பக்கங்களை மூன்று புத்தகங்கள் உள்ளடக்கப்பட்ட நிலையில் இந்த ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த வெற்றிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டியதன் அவசியம் குறித்தும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களில் கிழக்கு மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் கடுமையாக முயற்சிகளை மேற்கொண்டு ஒன்றரை கிழமைக்குள் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்களையுடைய ஆவணத்தை தொகுத்துள்ளனர். அந்த ஆவணம் திரைசேரியில் கையளிக்கப்பட முன்னர் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீர் நசீர் அஹமட் ஆராய்ந்து பார்த்தார்.

கடந்த 14ம் திகதி திரைசேரியில் நடைபெற்ற கிழக்கு மாகாண வெற்றிடங்கள் தொடர்பான தரவுகள் அடங்கிய ஆவணம் இரு வாரங்களில் திரைசேறி மற்றும் முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்திடன் கையளிக்குமாறு பிரதமரின் ஆலோசகர் ஆர். பாஸ்கரலிங்கம் பணிப்புரை விடுத்திருந்தமைக்கமைய இரு வாரங்களில் ஆவணங்கள் ஒன்றரை வாரங்களில் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த ஆவணத்தில் ஆசிரியர் வெற்றிடங்கள், திணைக்கள வெற்றிடங்கள் உட்பட கிழக்கு மாகாணத்தின் அரச நிறுவனங்களில் உள்ள வெற்றிடங்கள் தொடர்பான தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435