கிழக்கு ஆசிரியர் நியமனத்திற்கான மேல் முறையீட்டுக்குழு அமைப்பு

கிழக்கு மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு வழங்கப்பட்ட பட்டதாரி மற்றும் ஆங்கில டிப்ளோமாதாரி நியமன மேல் முறையீடுகளை ஆராய்வதற்கான மேல் முறையீட்டுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம இக்குழுவை நியமித்துள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநர் அசங்க அபேவர்தன தலைமையில் மூன்றுபேர் அடங்கிய மேற்படி குழு அமைக்கப்பட்டுள்ளதுடன் அண்மைய நியமனங்களில் பாதிக்கப்பட்டவர்கள் தமது மேன்முறையீட்டை நியாயப்படுத்துவதற்கான காரணங்களை அனுப்பி வைக்க முடியும்.

குறித்த நியமனத்திற்கான போட்டிப்பரீட்சையில் தோற்றிய பட்டதாரிகளில் 2568பேர் சித்தியடைந்துள்ளபோதிலும் 1119 பேர் மட்டுமே நியமனம் பெற்றுள்ளனர். ஆரம்பத்தில் 1440பேருக்கு நியமனம் வழங்க தீர்மானிக்கப்பட்டபோதிலும் குறைந்த எண்ணிக்கையானவர்களுக்கே நியமனம் வழங்கப்பட்டது. அதேபோல் 296 ஆங்கில டிப்ளோமாதாரிகளுக்கு நியமனம் வழங்கப்படும் என்று கூறப்பட்டபோதிலும் 254 பேருக்கு மட்டுமே ஆங்கில ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டது.

மேலும் ஆங்கில ஆசிரியர்களுக்கான முதலாம் இலக்க நேர்முகப்பரீட்சையில் விண்ணப்பதாரிகள் மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்பட்டதன் காரணமாக அசௌகரியங்களுக்கு முகங்ககொடுத்தமையினால் தெரிவாகாமை உள்ளிட்ட சகல விடயங்களையும் ஆளுநரின் செயலாளருக்கு முகவரியிட்டு எதிர்வரும் 25ம் திகதிக்கு முன்னர் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்கலாம் என்றும் மேல் முறையீட்டுக்குழுவின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளருமான அசங்க அபேவர்தன தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435