தொழிலில் ஈடுபடுவதற்கான வயதெல்லை 14 இலிருந்து 16 ஆக அதிகரிப்பு

அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமைய தொழிலில் ஈடுபடுவதற்கான ஆக குறைந்த வயதெல்லை 14 இலிருந்து 16 ஆக அதிகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிவிவகார, திறன் அபிவிருத்தி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டளவில் சிறுவர் தொழிலாளர்களை இல்லாமல் செய்வதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் சிறுவர் தொழிலாளர்களை இல்லாமல் செய்து உரிய வயதில் சிறுவர்களுக்கு தேவையான கல்வி மற்றும் திறன்கள் உள்ளிட்ட பொருத்தமான அணுகுமுறைகளை கட்டியெழுப்புவது தமது பொறுப்பாகும் என அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435