கிழக்கு ஆசிரியர் வெற்றிடங்களுக்கு தொழிலற்ற பட்டதாரிகள்……

கிழக்கு மாகாண பாடசாலைகளில் உள்ள ஆசிரியர் மற்றும் அதிபர் வெற்றிடங்களுக்கு வேலையற்ற பட்டதாரிகளை நியமிப்பது குறித்த உத்தேசத் திட்ட உயர் மட்ட கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் 14ம் திகதி திரைசேறியில் நடைபெறவுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கமைய அவருடைய ஆலோசகர் ஆர். பாஸ்கரலிங்கம் தலைமையில் இக்கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

கிழக்குப் பட்டதாரிகளின் தொடர் போராட்டத்தை கருத்திற்கொண்டு கடந்த வாரம் பிரதமரை சந்தித்த கிழக்கு முதலமைச்சர் பிரச்சினைகள் தொடர்பிலும் கிழக்கு மாகாணத்தில் காணப்படும் 4703 ஆசியரியர், அதிபர் வெற்றிடங்கள் தொடர்பிலும் சுட்டிக்காட்டியிருந்தார். ஒரு வார காலத்தில் குறித்த பிரச்சினையை தீர்ப்பதற்கான சாதகமான முடிவை தெரிவிப்பதாக உறுதியளித்திருந்த பிரதமர் அதற்கமைய தற்போது இவ்வுயர் மட்ட கலந்துரையாடலை ஏற்பாடு செய்ய பணிப்புரை விடுத்துள்ளார்.

தேசிய திட்டமிடல் திணைக்கள ஏற்பாட்டில் இக்கலந்துரையாடலை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதமர் உத்தரவிட்டுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இக்கலந்துரையாடலில், கிழக்கு முதலமைச்சர், மாகாண கல்வியமைச்சர், மத்திய கல்வியமைச்சின் செயலாளர், திரைச்சேரி பணிப்பாளர் நாயகம், தேசிய திட்டமிடல் திணைக்கள பணிப்பாளர் நாயகம், கிழக்கு மாகாணசபை பிரதம செயலாளர், மாகாண கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளை கலந்துகொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435