கிழக்கு தொண்டராசிரியர் நியமனம்- முதலமைச்சருடன் கலந்துரையாடல்

கிழக்கு மாகாணத்திலுள்ள தொண்டராசியர்களுக்கு தீர்வினை வழங்கும் நடவடிக்கையில் கல்வி அமைச்சையும் இணைத்துக்கொண்டு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு

கிழக்கு முதலமைச்சர் ஹாபீஸ் நஷீர் அஹமட்டுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

கிழக்கு மாகாண தொண்டராசிரியர்கள் விவகாரம் தொடர்பாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை இன்று (26) அலரிமாளிகையில் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன் போது கிழக்கு மாகாணத்தில் உள்ள 445 தொண்டராசியர்களுக்கும் உடன் நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிழக்கு முதல்வர் நசீர் அஹமட் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையடுத்து கல்வியமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியராச்சியை உடன் அழைத்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க தொண்டராசிரியர்களின் நியமனம் தொடர்பான தாமதத்திற்கான காரணங்களை கேட்டறிந்துள்ளார்.

இதையடுத்து தொண்டராசியர்களுக்கு தீர்வினை வழங்கும் நடவடிக்கையில் கல்வியமைச்சையும் இணைத்து நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கிழக்கு முதலமைச்சருக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்துடன், கடந்த 2013 ஆம் ஆண்டு வரையான தொண்டராசிரியர்களை கல்விச் சேவைக்கு இணைத்துக் கொள்ள வேண்டும் எனவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

தொண்டராசிரியர்களை நியமிக்கு விடயத்தை மாகாண கல்வியமைச்சிடம் கையளிக்க வேண்டும் எனவும் எனவும் கிழக்கு முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435