கிழக்கு பட்டதாரிகளின் நியமன வயது 45ஆக உயர்த்தப்படுமா?

கிழக்கு மாகாண பட்டதாரிகளின் நியமன வயதெல்லையை 45 ஆக உயர்த்துவதற்கான ஒப்புதல் கிடைகும் சாத்தியம் உள்ளதாக கிழக்கு மாகாண முதமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

ஆளுனர் ரோஹித்த போகொல்லாகமவுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் போது அவர் சாதகமான பதிலை வழங்கியுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் உறுதியான பதிலை இவ்வாரத்திற்குள் பட்டதாரிகளுக்கு வழங்க முடியும் என்று தாம் நம்புவதாக தெரிவித்துள்ள கிழக்கு முதலமைச்சர்,  நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக வடக்கு கிழக்கு பட்டதாரிகள் தமது பட்டப்படிப்பை பூர்த்தி செய்வதில் பல்வேறு தாமதங்கள் ஏற்பட்டமையினால் உரிய வயதில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்வதில் தாமதம் ஏற்பட்டதாக கிழக்கு ஆளுநரிடம் எடுத்துரைத்தாகவும் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில உள்ள சுமார் நான்காயிரம் பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அதன் முதற்கட்டமாக 1700 பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் உள்வாங்குவதற்கான விண்ணப்பங்கள் இவ்வார ஆரம்பத்தில் கோரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435