கிழக்கு பட்டதாரிகளுக்கு நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சை ரத்து!

கிழக்கு மாகாண சபையினால் கிழக்கு மாகாணத்திலுள்ள பட்டதாரிகளுக்கு நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சை இரத்துச் செய்யப்படுவதாக இன்று வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் கிழக்கு பட்டதாரிகளுக்கு அரச நியமனம் வழங்குவதற்காக நடத்தப்பட்ட போட்டிப்பரீட்சையில் போட்டிப் பரீட்சையில் பல்வேறு குளறுபடிகள் இடம்பெற்றுள்ளதாக பட்டதாரிகள் மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வரிடத்தில் செய்த முறைப்பாடு செய்தனர். இவ்விடயம் தொடர்பில் மாகாண சபையின் கடந்த அமர்வின்போது மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் போட்டிப்பரீட்சையை இரத்துச் செய்ய வேண்டுமென பிரேரணையொன்றையும் சமர்ப்பித்திருந்தார்.

இது தொடர்பாக ஆராய்ந்து முடிவெடுப்பதற்காக கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்டினால் விசேட குழு நியமிக்கப்பட்டது. இந்தக் குழுவில் கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் கிழக்கு மாகாண கல்வியமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி, மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை உட்பட மாகாண சபை உறுப்பினர்களும் அங்கம் வகிக்கின்றனர். இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்த குழு போட்டிப் பரீட்சை ரத்து செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சரின் ஊடகப் பிரிவு நேற்று (11) அறிவித்தது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435