கிழக்கு பட்டதாரிகள் விவகாரம்- ஆளுநருக்கு கடிதம்

கிழக்கு மாகாண பட்டதாரிகளின் நியமனம் வழங்கும் நடவடிக்கையினை துரிதப்படுத்தக் கோரி கிழக்குமாகாண ஆளுனர் ரோஹிதபோகொல்லாகமவுக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நசீர்அஹமட் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் கடந்த காலங்களில் நூறு நாட்களுக்கும் மேலாக போராட்டங்களை முன்னெடுத்து போட்டிப் பரீட்சைகளும் நிறைவடைந்துள்ள நிலையில் பட்டதாரிகளுக்கான ஆசிரியர் சேவைக்கான நியமனங்களை துரிதமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடுமையான முயற்சிகளின் விளைவாக 1700 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்க அனுமதி கிடைத்துள்ளது. ஏலவே 254 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது. மிகுதி 1446 பேருக்கான நியமனங்களை துரிதமாக வழங்க வேண்டும் என்று அக்கடிதத்தில் கோரப்பட்டுள்ளது

மாகாணசபையில் காலம் நிறைவடைந்துள்ள நிலையில் குறித்த நடவடிக்கையை துரிதப்படுத்துமாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் ஆளுநருக்கு இக்கடிதத்தை அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435