மீண்டும் பணிப்புறக்கணிப்பு எச்சரிக்கை

தொடருந்து திணைக்களத்தில் பணியாற்றும் தற்காலிக மற்றும் சாதாரண பணியாளர்களுக்கு நிரந்த நியமனம் வழங்குவதற்கான கோரிக்கையை அதிகாரிகள் கருத்திற்கொள்ளாவிட்டால், எதிர்காலத்தில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட நேரிடும் என தொடருந்து தொழிற்சங்கம் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது.

குறித்த பணியாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதில், சில சுற்றறிக்கை மற்றும் சட்ட ஏற்பாடுகள் தடையாக அமைந்துள்ளது என தொடருந்து இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொட தெரிவித்துள்ளார்.

வேதன பிரச்சினை உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து தொடருந்து தொழிற்சங்கத்தினர் முன்னதாக பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

  1. இதையடுத்து, தொடருந்து சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435