கிழக்கில் பணியாற்றும் வௌி மாகாணஆசிரியர்களுக்கு இடமாற்றம்

கிழக்கு மாகாணத்திலே வேறு மாவட்டங்களில் கடமை புரிகின்ற ஆசிரியர்களை சொந்த மாவட்டங்களுக்கு ஏப்ரல் 05 ஆம் திகதி தொடக்கம் இடமாற்றம் வழங்குமாறு ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மட்டக்களப்பு ஆளுநர் பணிமனையில் கடந்த 18ஆம் திகதி இடம்பெற்ற மாகாண கல்வி பணிப்பாளர் ,வலயக்கல்வி பணிப்பாளர்கள்,மேலதிக கல்விப்பணிப்பாளர்கள், ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடலில் இந்த உத்தரவை ஆளுநர் பிறப்பித்தார்.

இந்த இடமாற்றத்திற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் கோரப்படவுள்ளது. அதற்கான விண்ணப்பத்தை பெற்று இம்மாதம் 25 ஆம் திகதிக்கு முன்பு தங்களது தகவல்களை மாகாண கல்வித்திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கின்ற பட்சத்தில் ஏப்ரல் 05 திகதி தொடக்கம் இடமாற்றங்கள் வழங்கப்படும்.

அத்தோடு இந்த இடமாற்றத்தினால் கிழக்கு மாகாணத்தில் ஏற்படும் 800 ஆசிரிய வெற்றிடத்தை உடனடியாக நிரப்புவதற்காக மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு விண்ணப்பங்களை கோரவுள்ளது. ஏப்ரல் 05 ஆம் திகதி முதல் தொழிற்படும் விதமாக உயர்தரம் சித்தியடைந்து சம்பந்தப்பட்ட பாடங்களில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பாடசாலைகளில் ஆசிரியர் நியமனம் வழங்கப்படவுள்ளது.

கிழக்கு ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்வின் உத்தரவின் பிரகாரம் பொதுச்சேவை ஆணைக்குழு ஒவ்வொரு வலயக்கல்வி பணிப்பாளர் அலுவலகத்திலும் நேர்முக பரீட்சைகளை நடாத்தி பாடசாலைகளுக்கான ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435