கிழக்கு மாகாணத்தில் கோரப்பட்டிருந்த ஆசிரியர் போட்டிப்பரீட்சைக்கு விண்ணப்பித்த மாகாண விழிப்புலன் அற்ற பட்டதாரிகளுக்கான இலவச தொழில் வழிக்காட்டல் மற்றும் போட்டிப்பரீட்சைக்கு முகங்கொடுக்கும் அணுகுமுறைகள் தொடர்பான விசேட பயிற்சியை வழங்க கீறீன் பிளவர் இலங்கை விழிப்புலனற்றோர் அமைப்பு தீர்மானித்துள்ளது.
கிழக்கு மாகாணத்தில் உள்ள மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள விழிப்புலனற்ற பட்டதாரிகளை கணக்கிடுவதுடன் போட்டிப்பரீட்சைக்கு முகங்கொடுப்பது தொடர்பிலும் அவர்களுக்கு தௌிவுபடுத்தப்படவுள்ளதாக அவ்வமைப்பின் சிரேஷ்ட தலைவர் எம்.ஏ.எம் மிஸ்தாக் தெரிவித்துள்ளார்.
துறைசார்ந்தவர்களினால் பயிற்சிகள் வழங்கப்படவிருப்பதுடன், மாவட்ட ரீதியாக விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரிகளின் எண்ணிக்கைக்கமைய, அந்ததந்த மாவட்டங்களில் பயிற்சி செயலமர்வுகள் நடத்தப்படவுள்ளன.
எனவே, விண்ணப்பதாரிகள் அமைப்பின் சிரேஷ்ட தலைவர் எம்.ஏ.எம் முஸ்தாக்கின் தொலைபேசி இலக்கம், 077 4218887 அல்லது, அமைப்பின் உயர்பீட உறுப்பினர் ஏ. சலாமின் தொடர்பு இலக்கம் 075 2265900 உடன் தொடர்பு கொண்டு பதிவு செய்யுமாறு கோரப்பட்டுள்ளனர்.
கிழக்கு மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு விண்ணப்பங்களை அண்மையில் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.