குடிவரவு குடியகழ்வு திணைக்கள நள்ளிரவு தொடக்கம் “நீதிக்கான போராட்டம்” என்ற பெயரில் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.
மூன்று பிரதான கோரிக்கைகளை முன்வைத்து கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையம், இலங்கையின் அனைத்து துறைமுகங்கள் என்பன குடிவரவு குடியழ்வு திணைக்கள பிரதான காரியாலயத்துடன் தொடர்புபட்டு இத்தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக திணைக்கள அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் அருண கணுகல தெரிவித்துள்ளார்.
தமது சேவைக்கான யாப்பு பெற்றுக்கொள்ளல், கடந்த 2002ம் ஆண்டு வரை செயற்பட்ட வழக்கு தொடர்வதற்காக செயற்பட்ட சட்டப்பிரிவை மீண்டும் ஸ்தாபித்தல் மற்றும் வௌிநாடுகளில் தற்போது இயங்கிவரும் வௌிநாட்டு உயர்ஸ்தானிகராலயங்களில் தற்போது நியமிக்கப்பட்டுள்ள அரசியல் ஆதரவாளர்களுக்குப் பதிலாக தொழில் அனுபவம் உள்ள தமது திணைக்கள அதிகாரிகளை நியமித்தல் என்பன இவர்களின் பிரதான கோரிக்கையாகும்.
இவ்விடயம் தொடர்பில் பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்திற்குள் செல்லும் மற்றும் வௌியேறும் பயணிகளை தௌிவுபடுத்துவதற்கான துண்டுப்பிரசுரமும் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகிறது.
இத்தொழிற்சங்க நடவடிக்கையினால் பயணிகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படப்போவதில்லை என்று அருண கணுகல தெரிவித்தார்.
இத்தொழிற்சங்க நடவடிக்கைக்கு அரசாங்கம் உரிய பதில் வழங்காவிடின் எதிர்வரும் காலங்களில் விரும்பியோ விரும்பாமலோ கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டியேற்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.