இலங்கை சுய தொழிலாளர் தேசிய முச்சக்கர வண்டி சங்க தலைவர் சுனில் ஜயவர்த்தனவின் கொலை செய்யபபட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இலக்கம் 253 கொட்டாவ வீதி – மிரிஹான முகவரியில் அமைந்துள்ள குத்தகை, வாகன கடன் வசதிகளை வழங்கும் நிறுவனம் ஒன்றிற்கு சுனில் ஜயவர்த்தன நேற்று சென்றிருந்தார்.
தம்முடன் நெருங்கிய ஒருவரது பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அவர் அங்கு சென்றிருந்தார்.
இதன்போது, மாதாந்த தவணை பணத்தை செலுத்த முடியாததன் காரணமாக முச்சக்கர வண்டியை குத்தகை நிறுவனம் மீண்டும் பெற்றுக் கொள்வதற்கு எதிராக சுனில் ஜயவர்த்தன கருத்து வெளியிட்டுள்ளார்.
இதனை தமது பேஸ்புக் கணக்கு ஊடாக நேரலையாக வழங்க சுனில் ஜயவர்த்தன நடவடிக்கை எடுத்திருந்தார்.
குறித்த சந்தர்ப்பத்தில் தவணை கட்டணங்கள் செலுத்தாத வாகனங்களை பறிமுதல் செய்யும் சிலரும் உடனிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, சுனில் ஜயவர்த்தன மற்றும் நிதி நிறுவனத்தின் சேவையாளர்களுக்கு இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
இதன்போது, சுனில் ஜயவர்த்தன மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதன்பின்னர் களுபோவில் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கொலை சம்பவம் தொடர்பில் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.