குவைட்டில் பணிபுரிந்து, தொழில் உடன்படிக்கை முடிவடைந்த பின்னர் தமது தாய்நாட்டுக்கு மீண்டும் திரும்பி, பின்னர் மீண்டும் வீட்டுப் பணிப்பெண் பணிக்காக அவர்கள் குவைட்டுக்கு திரும்பும்போது, அவர்கந் தொடர்பில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்வதை கட்டாயமானதாக்க குவைட் அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.
இதற்கமைய, பணியாளர்களை பயணிக்கு அமர்த்தும் தொழில் நிறுவனங்களுக்கு, குவைட் உள்நாட்டு அமைச்சினால் இந்தத் தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இதற்கமைய செயற்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தத் தீர்மானமானது, ஆசிய மற்றும் ஆபிரிக்காவைச் சேர்ந்த 41 நாடுகளுக்காக நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், ஃபிலிப்பைன்ஸ், இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகள் உள்ளமை குறிப்பித்தக்கது.