கடவுச்சீட்டின்றி இருக்கும் இலங்கையர்கள் தம்மைப் பதிவு செய்ய நேரமொன்றை ஒதுக்கிக் கொள்ள (Appointments ) கீழ்வரும் இரண்டு இலக்கங்களுமே ஒதுக்கப்பட்டுள்ளன.
• 65616823
• 65619836
நீங்கள் தூதரகத்துக்கு வருகை தருவதன் மூலம் முன்பதிவு செய்து நேரமொன்றை ஒதுக்கிக் கொள்ள (Appointments ) முடியாது என்பதனை அறியத்தருகிறோம்.
இந்த இலக்கங்களுக்கு அதிக அழைப்புகள் தொடராக வருவதனால் உங்களுக்கு இணைப்பை ஏற்படுத்த முடியாவிடின் தொடர்ந்தும் முயற்சிக்கவும்.
முன்பதிவு செய்து நேரமொன்றை ஒதுக்கிக் கொள்ள வார நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களிலும் காலை 09.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை தூதரகத்தை தொடர்பு கொள்ள முடியும் என்பதனால் வீணாக பதட்டமடைய வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
முன்பதிவு செய்து நேரமொன்றை ஒதுக்கிக் கொள்ள நீங்கள் எங்களை அழைக்க முன்னர் தூரக அதிகாரிகளுக்கு தேவையான தகவல்களை விரைவாக வழங்க உங்களது கடவுச்சீட்டின் பிரதியையும் , தூதரக அதிகாரிகளால் வழங்கப்படும் முன்பதிவு இலக்கம் மற்றும் கால ,நேர விபரங்களைக் குறித்துக் கொள்ள ஒரு பேனையையும் தயார் நிலையில் வைத்திருக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
பதிவு நடவடிக்கைகளுக்காக தம்மை முன்பதிவு (Appointments) செய்து நேரமொன்றை ஒதுக்கிக் கொண்டவர்கள் முன்பதிவு இலக்கத்தை தூதரகத்தின் பிரதான நுழைவாயிலிலுள்ள அதிகாரிகளிடம் காண்பியுங்கள்.
பதிவு நடவடிக்கைகளுக்காக தம்மை முன்பதிவு (Appointments) செய்து நேரமொன்றை ஒதுக்கிக் கொண்டவர்கள் அத்தினத்தில் வருகை தரும் போது நீங்கள் எடுத்து வரும் கடவுச்சீட்டு பிரதியின் பின்பக்கத்தில் கீழ்வரும் விடயங்களைக் குறித்து வருமாறு கேட்டுக் கொள்கிறோம் .
1. உங்களது இலங்கை முகவரி
2. உங்களது குவைத் முகவரி
3. உங்களது குவைத் தொலைபேசி இலக்கம்
4. இலங்கையில் உள்ள உங்களது நெருங்கிய உறவினர் ஒருவரின் பெயர்
5.இலங்கையில் உள்ள உங்களது நெருங்கிய உறவினர் ஒருவரின் தொலைபேசி இலக்கம்
கொரோனா தொற்று காரணமாக பதிவு நடவடிக்கைகள் முன்பதிவு அடிப்படையிலேயே இடம் பெறும்.
மூலம் – குவைத் தமிழ் சோஷல் மீடியா