தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையில் நாட்டின் ஜனாதிபதி தலையிட வேண்டும் என கோரி அக்கரப்பத்தனை – வேவர்லி தோட்டத்தில் இரண்டு தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுக்கின்றனர்.
இந்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று (14) நான்காவது நாளாகவும் தொடர்கிறது.
தோட்ட நிர்வாகங்கள் தேயிலை மலைகளை முறையாக பராமரிக்காமை, தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய சலுகைகள் வழங்கப்படாமை உள்ளிட்ட 15 கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
அவர்களின் போராட்டத்தை ஆதரித்து அந்த பகுதியில் உள்ள தோட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தொழில் புறக்கணிப்பில் ஈடுபட்டு தமது ஆதரவை வெளியிப்படுத்தி வருகின்றனர்.