கூட்டு ஒப்பந்தத்தை மீறும் கம்பனிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

நிர்ணயிக்கப்பட்டதை விடவும் 140 ரூபா சம்பளத்தை குறைத்து வழங்க சில தோட்ட கம்பனிகள் திட்டமிட்டுள்ளமை தொடர்பில் எமக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

சௌமியபவனில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குற்றம்சாட்டியுள்ளார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், கூட்டு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சம்பள முறைமைக்கு மாறாக சில கம்பனிகள் மொத்த சம்பளத்தில் 140 ரூபாவை தன்னிச்சையாக குறைத்து தொழிலாளருக்கு வழங்க திட்டமிட்டுள்ளனர். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தான் நாம் நேற்றுமுன்தினம் ஹட்டனில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.

அதன் பின்னர் எமது குழுவொன்று தொழிலமைச்சருடன் குறித்த பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்தோம். தொடர்ந்து அமைச்சர் முதலாளிமார் சம்மேளத்தை தொடர்பு கொண்டு கதைத்ததுடன் குறைவாக சம்பளம் வழங்கும் கம்பனிகளின் பெயர் விபரங்களையும் அவர்களிடம் சமர்ப்பித்தோம்.

குறித்த பிரச்சினை தொடர்பிலும் தேசிய தோட்டங்களை துப்புறவு தொடர்பிலும் எதிர்வரும் வாரங்களில் கலந்துரையாடவுள்ளோம். கூட்டு ஒப்பந்த விடயங்கள் சரியான முறையில் செயற்படாவிடத்து சட்ட நடவடிக்கை எடுப்பதுடன் தொழிலாளர்களை ஒன்றிணைத்து போராட்டங்களை நடத்தவும் தீர்மானித்துள்ளோம். தேயிலை மலைகள் துப்புறவு செய்யப்படாமை தொடர்பிலும் அமைச்சரின் கவனததிற்கு கொண்டு வந்துள்ளோம் என்று அவர் மேலும் கூறினார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435