கூட்டு ஒப்பந்தத்தை விடுத்து மாற்று பொறிமுறை அவசியம்- முதலாளிமார் சம்மேளனம்

கூட்டு ஒப்பந்த நடைமுறையிலிருந்து விடுபட்டு மாற்று பொறிமுறைக்கு செல்ல வேண்டும் என முதலாளிமார் சம்மேளனம் யோசனை முன்வைத்துள்ளது.

முதலாளிமார் சம்மேளனத்தின் செயலாளர் லலித் ஒபேசேகர எமது செய்திச் சேவையிடம் இந்த விடயத்தை தெரிவித்தார்.

தேயிலை தொழில்துறையில் முன்னெடுக்கப்படும் பாரம்பரிய கொடுப்பனவு முறைமைகளில் இருந்து மாற்றத்தை மேற்கொள்ள பங்குதாரர்கள் அனைவரும் முன்வரவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

700 ரூபா அடிப்படை வேதனத்துடன், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெருந்தோட்டத் தொழிலாளர்களும், அவர்களுக்கு ஆதரவான தரப்பினரும் போராட்டங்களை மேற்கொண்டுவருகின்றனர்.

அத்துடன், கூட்டு ஒப்பந்த முறையிலிருந்து வெளியேற வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், முதலாளிமார் சம்மேளனத்தின் செயலாளர் லலித் ஒபேசேகர கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாதிடும் தரப்பினரிடம் இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435