பெருந்தோட்டத் தொழிலாளர்களது சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தம் கையொப்பமிடப்படுவது மேலும் தாமதிக்கலாம் என்று தொழிற்சங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெருந்தோட்டத் தொழிலாளர்களது அடிப்படை சம்பளத்தை 600 ரூபாவிற்கு மேல் அதிகரிக்க முடியாது என்று பெருந்தோட்ட நிறுவனங்களின் ஒன்றியம் ஏற்கனவே அறிவித்துள்ளது.
எனினும் சில பெருந்தோட்ட நிறுவனங்கள் அதனிலும் அதிகமான சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு முன்வந்திருப்பதாக கூட்டு ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்ற தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பில் கடந்த நாட்களில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் இணக்கப்பாடுகள் இன்றி நிறைவடைந்தன.
அதேநேரம் 1000 ரூபாய் அடிப்படை சம்பளத்தை வலியுறுத்தி தொடர்ச்சியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எவ்வாறாயினும் தற்போது பண்டிகை காலம் ஆரம்பித்துள்ள நிலையில், கூட்டு ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் ஜனவரி மாதத்தின் பின்னரே இடம்பெறும் என்று தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம் ஜனவரி மாதம் முதல்வாரத்தில் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் இடம்பெறும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபத்தலைவர் அருள்சாமி தெரிவித்துள்ளார்.
வழிமூலம்: சூரியன் செய்திகள்