தோட்டத் தொழிலாளர்கள் இனி பண்ணையாளர் என்றழைக்கப்படுவர்

சாமிமலை ஓல்டன் தோட்டத்து மக்கள் தம்மை பண்ணையாளர்கள் என்று உறுதிப்படுத்திக்கொண்டுள்ளதுடன் இனி வரும் காலங்களில் தோட்டத் தொழிலாளர்கள் என்று தம்மை அழைப்பதை தவிர்க்கப்போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஓல்டன் தோட்டத்தின் நான்கு பிரிவுகளைச் சேர்ந்த 90 பேருக்கு பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஒரு வருட பயிற்சி வழங்கப்பட்டு வௌியேறும் நிகழ்வில் கலந்துகொண்டு வௌியேறியபோது கடந்த 40 வருடங்களாக அத்தோட்டத்தில் முகாமையாளராக இருந்த சி.எஸ் பெரேரா என்பவர் கலந்துகொண்டு இதனை தெரிவித்தார்.

இதன் போது கருத்து தெரிவித்த அவர், இனிமேல் இவர்களை பண்ணையாளர்கள் என்று அழைப்பதே சரியானது. கடந்த 185 வருடங்களாக தோட்டத் தொழிலாளர்கள் என்று இவர்கள் அழைக்கப்பட்டபோதிலும் தற்போது பண்ணையாளர்கள் என்பது அழைப்பதே பொருத்தமானது. இதனால் அவர்களுக்கு பல நன்மைகள் உள்ளன. எதிர்காலத்தில் அவர்கள் வௌியிடங்களுக்கு வேலைக்கு செல்லாமல் தத்தமது பண்ணைகளில் பணிபுரிந்து மாதாந்தம் 30,000 – 40,000 வரையான பணத்தை சம்பாதிக்க வாய்ப்புகள் உள்ளன.

குடிப்பழக்கத்தையும், புகைத்தலையும் வெற்றிலை போடும் பழக்கத்தையும் இப்பண்ணையாளர்கள் கைவிட்டுள்ளனர். இது அவர்களுக்கு மிகப் பெரிய வாய்ப்பாகும். ஒரு வருடம் வழங்கப்பட்ட பயிற்சியே இதற்கு பிரதான காரணம் என்று தெரிவித்தார்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435