கூட்டு ஒப்பந்தம் தொழிலாளரின் சம்பளத்தை கூட்டவா? குறைக்கவா?

நாளாந்த சம்பளமாக 620 ரூபாவை பெற்று வந்த தோட்டத் தொழிலாளர்கள் கூட்டொப்பந்தத்துக்கு பின்னர் அதையும் விட குறைந்த சம்பளத்தை பெறுகின்ற துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது என்று பதுளை மாவட்ட எம்.பி அ. அரவிந்தகுமார் நேற்று (30) பாராளுமன்றில் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றில் நேற்று இடம்பெற்ற தொழில் மற்றும் தொழிலுறவுகள் அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தின் போது உரையாற்றியபோதே அவர் இதனை சுட்டிக்காட்டினார்.

கூட்டு ஒப்பந்தம் நிறைவடைந்து 18 மாதங்கள் நிறைவடைந்த நிலையில் தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுகொடுக்கும் வகையில் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாக கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட போதும் தோட்ட கம்பனிகள் அதனை மீறுவதால் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாள் சம்பளமாக 620 ரூபா பெற்ற தொழலாளர்களின் சம்பளமானது ஒப்பந்தத்தின் பின்னர் 730 ரூபாவாக அதிகரிக்கப்பட்டது. அதில் 140 ரூபா ஊக்குவிப்பு கொடுப்பனவாகும். அதனை தொழிலாளர்களுக்கு வழங்குவதில்லை என்ற நிலைப்பாட்டில் தோட்ட கம்பனிகள் உள்ளன. வழமையாக 10 கிலோ கொழுந்து பறிக்க முடியும். அந்த அளவை அதிகரித்துள்ள தோட்ட நிர்வாகம் ஊக்குவிப்பு கொடுக்காமல் தவிர்க்கின்றனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435