கூட்டு ஒப்பந்தம் மீள்பரிசீலனை: இ.தொ.கா

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பான கூட்டு ஒப்பந்தத்தை மறு பரீசீலனைக்கு உட்படுத்துவதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாக அதன் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்தகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், 2015ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் திகதி நிறைவடைந்த சம்பள உடன்படிக்கை 18 மாதகாலமாக பல சுற்றுப்பேச்சுவார்த்தைகளின் பின் 730 ரூபாய் நாட் சம்பளத்துடன், வாரத்தில் ஆறு நாட்கள் வேலை என்ற அடிப்படையில் கைச்சாத்திடப்படடிருந்தது.

இந்நிலையில், தேயிலை விலைக்கு ஏற்ற கொடுப்பனவு, 140 சம்பள அதிகர்ப்பு என்பவை தொடர்பில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் போது எவ்வித நிபந்தனையும் விதிக்கப்பட்டிருக்கவில்லை. ஆனால், ஒப்பந்தம் கைச்சாத்திட்டப் பின்னர் தோட்ட நிர்வாகங்கள் 18கிலோவிற்கு அதிகமான கொழுந்தை பறிக்க வேண்டும், தேயிலை விலை வீழ்ச்சியில் உள்ளது எனப் பல காரணங்களைகாட்டி தொழிலாளர்களுக்கு 140 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்க தோட்ட நிர்வாகங்கள் மறுத்து வருகின்றன.

இதற்கு எதிரிப்புத் தெரிவிக்கும் வகையிலேயே மேற்படி கருத்து தொண்டமான் வெளியிட்டிருந்தார். இதன்படி கூட்டு ஒப்பந்தம் தொடர்பாக மீண்டும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு காங்கிரஸ் எதிர்பார்த்துள்ளது. இதற்குத் தேவையான ஏற்பாடுகளை செய்து தருமாறு தொழில் அமைச்சை கேட்டுக்கொண்டுள்ளது என்றும் கூறினார்.

இந்நிலையில் இந்த விடயம் தொடர்பில் நாம் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான முத்துசிவலிங்கத்திடும் வினவின போது,
“”நாங்கள் பலத் தோட்டங்களும் விஜயம் செய்த வண்ணமே உள்ளோம். கூட்டு ஒப்பந்த விதிமுறைகளை மீறி தோட்ட நிர்வாகங்கள் நடந்துக்கொள்கின்றன. கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட போது 140 சம்பள அதிகரிப்புக்கு 18,20 கிலோ கொழுந்து பறிக்க வேண்டும் என்று கம்பனிகள் கூறவில்லை. அவ்வாறு கொழுந்தை பறிக்கவும் முடியாது. பிரதேசத்திற்கு பிரதேசம் காலநிலை, நிலத்தின் தன்மை அடிப்படையில் கொழுந்து வளர்ச்சி வேறுப்படும். இவை திட்டமிட்டு தொழிலாளர்களுக்கு 140 ரூபா அதிகரிப்பை தடுக்க மேற்கொள்ளப்படும் வழிமுறையாகும்.

இந்த விடயம் தொடர்பில் தொழில் அமைச்சருடன் பேச்சுகள் நடத்த நாங்கள் நேரம் கோரியுள்ளோம் எடுத்த மாதம் அவர் இந்த விடயம் தொடர்பில் பேச்சுகளை முன்னெடுப்போம். அவருடன் பேச்சுவார்த்தையை முடிந்துவிட்டு தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுப்போம்” என்றார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435