கையெழுத்துப் போராட்டத்தில் கிழக்கு மாகாண பட்டதாரிகள்!

அரச திணைக்களங்கள் மற்றும் பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களுக்கு வேலையற்ற பட்டதாரிகளை உள்வாங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும் என்று கோரி கிழக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் போராட்டமொன்றை மேற்கொண்டுள்ளது. நேற்றுமுன்தினம் (31) மேற்கொண்டுள்ளனர்.

மட்டு மாவட்ட வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு ஆசிரியர் கலாசலையில் இடம்பெற்ற இக்கையெழுத்து போராட்டத்தில் கருத்து தெரிவித்த சங்கத் தலைவர் ரி கிஷாந்த் 2012ஆம் ஆண்டுக்கு பின்னர் பட்டம் பெற்ற சுமார் 1500 இற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் தொழில்வாய்ப்பின்றி அல்லலுறுகின்றனர். பல அரசியல்வாதிகள், முதலமைச்சர் உட்பட பலர் உறுதிமொழியளித்த போதிலும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்று சுட்டிக்காட்டினார்.

கிழக்கு மாகாணத்தில் ஆசி­ரியர் வெற்றிடங்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர் வெற்றிடங்கள் உள்ள நிலையிலும் அவற்றுக்கு வேலையில்லா பட்டதாரிகளை நியமிப்பதற்கு எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லையென போராட்டத்தில் கலந்துகொண்ட பட்டதாரிகள் கவலை தெரிவித்தனர்.

அகில இலங்கை வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் தம்மிக்க முனசிங்க மற்றும் அதன் ஆலோசகர் தென்னே ஞானானந்த தேரர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435