தனியார் துறையில் பணியாற்றும் இலட்சக் கணக்கான ஊழியர்கள் தொழிலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அனைத்து நிறுவன ஊழியர் சங்கத்தின் தலைவர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் மாதம் இறுதிளவில் ஆடை உற்பத்தித் தொழிற்சாலைகளில் பணியாற்றிய சுமார் இரண்டு இலட்சம் ஊழியர்களுடைய தொழில் இல்லாமலாக்கப்பட்டுள்ளதாக அச்சங்கம் தேசிய நாளிதழான லங்காதீபவுச்சு வழங்கியுள்ள செவ்வியின் போது சுட்டிக்காட்டியுள்ளது.
நூற்றுக்கு ஐம்பது வீதம் தொழிலாளர் குறைப்புக்கு சில நிறுவனங்கள் கோரியுள்ளன. அதேபோல் வருடத்திற்கும் குறைவான சேவைக் காலத்தையுடைய ஊழியர்களை தொழில் நீக்கம் செய்வதற்கும் பல நிறுவனங்கள் கோரியுள்ளன. இவ்விடயம் தொடர்பில் எமக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
தனியார் துறையில் தற்போது ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை தடுப்பதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் துறையை கட்டியெழுப்ப குறைந்தது 300 பில்லியன் ரூபா நிதியாவது முதலீடு செய்ய வேண்டும். வியாபாரங்களில் ஏற்பட்டுள் நட்டத்தை ஆராயந்து அவற்றை வருடாந்த விற்பனையுடன் ஒப்பிட்டு அவசியமான உதவியை வழங்க வேண்டும் என்றும் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் தொழில் அமைச்சருடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. அக்கலந்துரையாடலில் மேற்கொள்ளப்பட்ட இணக்கப்பாடு இதுவரை செயற்படுத்தப்படவில்லை என்றும் வசந்த சமரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.