கொரிய மொழி தேர்ச்சி பரீட்சையின் இறுதி பெறுபேறுகள் வெளியீடு

2019 ஆம் ஆண்டுக்கான மதிப்பீட்டு செயல்முறை மதிப்பெண் அடிப்படையில் நடத்தப்பட்ட கொரிய மொழி தேர்ச்சி பரீட்டையின் இறுதி பெறுபேறுகள் இன்று (22) வெளியிடப்பட்டுள்ளன.

இந்த பெறுபேறுகளை www.slbfe.lk என்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு இணையத்தளத்தில் பார்வையிட முடியும். இந்த பரிட்சை 2019 ஆம் ஆண்டு மே மாதம் 28 ஆம் திகதி ஆரம்பமானதுடன். இது 2019 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதி வரையில் தயாரிப்பு நிர்மாணத்துறை மற்றும் கடல் தொழில் ஆகிய துறைகளின் கீழ் கணினி அடிப்படையில் (Online) நடைபெற்றது.

இந்த பரீட்சைக்கு 3,319 பரீட்சைத்திகள் தோற்றினர். இவர்களுள் 2,411 பேர் சித்தி அடைந்தனர்.

இதற்கு மேலதிகமாக கொரியா மனிதவள திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்ட வகையில் கொரியா மொழி தேர்ச்சி பரீட்சை பெறுபேறு இம் மாதம் 29 ஆம் திகதி வெளியிடப்படவிருந்தது.
இருப்பினும் இந்த நிறுவனத்தின் மூலம் குறிப்பிட்ட தினத்திற்கு முன்னதாக பெறுபேறுகளை வெளியிடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இலங்கை அரசாங்கம் மற்றும் கொரிய அரசாங்கத்திற்கு இடையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அமைவாக இந்த தொழில் வாய்ப்புக்கான சந்தர்ப்பம் இலங்கையர்களுக்கு கிடைத்துள்ளது.

கொரிய மனிதவள திணைக்களத்தின் மூலம் கொரிய மொழி தேர்ச்சி பரீட்சை நடத்தப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435