கொரிய மொழி பரீட்சைக்கான விண்ணப்பங்களை இம்மாதம் 20 தொடக்கம் 23 திகதி வரை நாடு பூராவும் உள்ள அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம்.
உற்பத்தி மற்றும் மீன்பிடித் துறைசார் தொழில்களுக்காக மாத்திரமே வழங்கப்படவுள்ளன. அநுராதபுரம், புதுளை, கண்டி, மாத்தறை, இரத்தினபுரி, ஆகிய மாகாண காரியாலயங்ளில், காலி, கடவத்த, சீதுவ, தங்கல்ல, குருணாகலை, திருக்கோணமலை, வவுனியா, யாழ்ப்பாணம், ஆகிய பயிற்சி மத்திய நிலையங்களிலும், அத்துருகிரிய தேசிய பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவனத்திலும் இவ்விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ள முடியும்.
18 வயதுக்கும் மேற்பட்ட, 38 வயதுக்கு குறைந்த, சிறைத்தண்டனை பெறாத, கொரிய அரசினால் திருப்பியனுப்பப்படாதவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்களாவர்.
மேலதிக விபரங்களை www.slbfe.lk பெற்றுக்கொள்ள முடியும்.
வேலைத்தளம்