கொரோனாவால் மரணிக்கும் புலம்பெயர் பணியாளர்களுக்காக இழப்பீடு வழங்க கோரிக்கை

கொவிட் தொற்றினால் உயிரிழந்த 24 புலம்பெயர் தொழிலாளர்கள், 12 மில்லியன் ரூபா இழப்பீடு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திடம் கோரியுள்ளதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவிக்கின்றார்.

பாராளுமன்றத்தில் நேற்றைய தினம் (19) உரை நிகழ்த்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இவ்வாறு கோரப்பட்ட நட்டஈட்டில் 30 லட்சம் ரூபா பெறுமதியான 6 காசோலைகள், இலங்கை காப்புறுதி கூட்டுதாபனத்தினால் பணியகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்து, வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு நிமிர்த்தம் சென்ற இலங்கை பணியாளர்கள், கொவிட் தொற்று ஏற்பட்டதை அடுத்து, நாட்டிற்கு வருகைத் தர நேருமாக இருந்தால், இலங்கை காப்புறுதி கூட்டுதாபனத்தின் ஊடாக நட்டஈட்டை வழங்க ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

வைத்திய பரிசோதனைகள் மற்றும் விமான டிக்கட்களுக்காக 102 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட நிலையில், இலங்கை காப்புறுதி நிறுவனம் 49 காசோலைகளை தமக்கு அனுப்பியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

குறித்த காசோலைகளின் பெறுமதி 23 லட்சத்து 88 ஆயிரம் ரூபா என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவிக்கின்றார்.

கொவிட் தொற்றினால் உயிரிழந்த 68 வெளிநாட்டு பணியாளர்களில், 23 பேருக்கான கிரியைகளை செய்வதற்காக 40 ஆயிரம் ரூபா வீதம் 9 லட்சத்து 20 ஆயிரம் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

கொவிட் தொற்று காரணமாக நாட்டிற்கு வருகைத் தந்த 2163 பேர், மீண்டும் வெளிநாடுகளுக்கு செல்ல தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

1617 பேர் இலங்கையில் தொழில் வாய்ப்புக்களை செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

மேலும், 654 பேர் சுய தொழில் வாய்ப்புக்களில் ஈடுபட தயாராகவுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435