கோவிட்-19 தொற்றினால் இலங்கையில் 5 ஆவது உயிரிழப்பு இன்று பதிவாகியுள்ளது.
வெலிக்கந்ததை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவரே உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
அவர் ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடையவராவார்.
இத்தாலியில் இருந்து நாடுதிரும்பிய நிலையில், தனிமைப்படுத்தல் மையத்திற்கு அவர் அனுப்பிவைக்கப்பட்டவராவார்.
கடந்த 23 ஆம் திகதி வெலிக்கந்தை ஆதார வைத்தியசாலையில் அனுமதிப்பப்பட்ட அவர், கடந்த 26 ஆம் திகதி தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், இன்று காலை அவர் உயிரிழந்துள்ளார்.
இதற்கமைய கொரோனா தொற்றினால் இலங்கையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.