கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கான பணியில் ஈடுபட்ட பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் அவர்களுக்கு கீழ் நிலை பதவிகளிலுள்ள அதிகாரிகளுக்கு 5 ஆயிரம் ரூபா வெகுமதி வழங்கப்படவுள்ளது.
பொலிஸ் ஊடகப்பிரிவு அறிக்கையில் ஒன்றில் மேற்கண்ட விடயத்தை குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் கடந்த மாதம் 11 ஆம் திகதி முதல் நேற்று வரையான காலப்பகுதியில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளை நிறைவேற்றிய காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு இந்த வெகுமதி வழங்கப்படவுள்ளது.
5 ஆயிரம் ரூபா வெகுமதி வழங்குவது தொடர்பில் பதில் பொலிஸ்மா அதிபர் ஊடாக மாகாணங்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்களுக்கு ஆலாசனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.