கொரோனா நிலைமை மோசமடைந்தால்? கல்வி அமைச்சின் விசேட அறிவித்தல்

தற்போதைய கொரோனா நிலைமை மோசமடைந்தால் அனைத்து பாடசாலைகள், அறநெறிகள், ஏனைய கல்வி நிறுவனங்களுக்கும் மீண்டும் விடுமுறை வழங்கி அனைவரது சுகாதார பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்று (12) விடுத்துள்ள விசேட அறிக்கை ஒன்றில் கல்வி அமைச்சு இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

பிரதேசமட்ட நிலைமை தொடர்பில் அறிக்கையிடுவதற்கு விசேட தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பிரதி கல்விப் பணிப்பாளரின் தலைமையின் கீழ், இந்த நடவடிக்கைகள் கண்காணிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், 1988 என்ற துரித தொலைபேசி இலக்கத்திற்கோ, 0112785818 என்ற இலக்கத்திற்கோ அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ  பாடசாலை அதிபர்கள், கல்வி பணிப்பாளர்கள் உள்ளிட்ட கல்விச் சேவை அதிகாரிகள் தாம் சேவையாற்றும் பிரதேசங்கள் தொடர்பில் தகவல்களை வழங்க முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435