கொழும்பு மாநாகரசபை அதிகாரிக்கு கொவிட் 19

கொழும்பு மாநகர சபையின் மக்கள் உதவி திணைக்களத்தின் சிரேஷ்ட முகாமைத்துவ உதவியாளர் ஒருவருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதான சுகாதார வைத்திய அதிகாரி ருவாண் விஜேமுனி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, கொழும்பு மாநகர சபையின் மக்கள் உதவி திணைக்களம் அமைந்துள்ள கட்டிடத்தில் குடும்ப சுகாதார திணைக்களத்தின் பிரதான மருத்துவ அதிகாரி காரியாலயம் மற்றும் மகளிர் மற்றும் சிறுவர் பிரிவை தவிர்ந்த ஏனைய அனைத்து பிரிவுகளும் மூடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கொழும்பு மாநகர சபைக்குள் பொது மக்கள் பிரவேசிக்கும் செயற்பாடு மட்டுப்படுத்தப்படுள்ளதாகவும் கொழும்பு மாநகர சபையின் பிரதான சுகாதார வைத்திய அதிகாரி கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435