கொவிட் 19- எதிர்கால நிலை என்ன? விளக்குகிறார் Dr வாசன்

உலக சுகாதார அமையத்தின் கருத்துக்களுக்கமைய இலங்கையில் கொரோனா தொற்று நோயானது மூன்றாம் கட்டத்தில்தான் காணப்படுகின்றது. அதாவது கிராமங்களுக்கு இடையிலான குழுக்களாகத்தான் தொற்றுக்கள் காணப்படுகின்றது என்கிறார் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் சிறார் வைத்தியசாலை கிளையின் செயலாளரும் மத்திய குழு உறுப்பினருமான வைத்தியர் வாசன் ரட்னசிங்கம், கொரோனா தொற்று குறித்து மேலதிக விளக்கங்களை வருமாறு தெரிவித்துள்ளார்.

இன்னமும் நான்காவது நிலைக்கு மாறவில்லை. அதாவது சமூகத்தின் தொற்றாக இன்னும் மாறவில்லை.
ஆனால், ஊரடங்கு சட்டமானது தொடருமாக இருந்தால் ஏப்ரம் மாதம் முடிவடையும் காலப்பகுதியில் உணவுப் பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்படும். எனவே, அதை நிவர்த்தி செய்யும் வகையில் பல கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. எனவே அதனை ஈடு செய்வதற்காக பல நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.
முதலாவது நோய்தொற்று ஏற்பட்டவர்களை, நோய் தொற்று என சந்தேகிக்கப்படுபவர்களை அவர்களுடன் தொடர்பு உள்ளவர்களை வீரியமாக பரிசோதனைக்கு உட்படுத்துதல். அதாவது இதனை ரெஸ்ட் ரெஸ்ட் ரெஸ்ட் என அழைப்பர்.

இதன் மூலம் கிட்டத்தட்ட 42 ஆயிரத்திற்கு மேற்பட்ட தொற்றாளர்களையும் தொற்றாளர்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்களையும் பரிசோதிப்பதன் மூலம். தொற்று ஏற்படாத பகுதிகளை இலகுவாக இனங்காண முடியும். இவ்வாறு தொற்று ஏற்படாத இடங்களை அடையாளம் காண்பதன் மூலம் அந்தப் பிரதேசங்களின் ஊரடங்கு சட்டத்தினை தளர்த்தி வழமையான விவசாய நடவடிக்கைகள், மீன்பிடி மற்றும் உள்ளூர் உற்பத்திகளை ஏற்படுத்த முடியும்.
அவ்வாறு செய்வதன் மூலம் உணவுத் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்.

ஆகவே, ரெஸ்ட் ரெஸ்ட் ரெஸ்ட் என்கிற வீரியமாக தொற்று ஏற்படுபவர்களை பரிசோதனைக் உட்படுத்துகின்ற முறைகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்துமானால் நாங்கள் இன்னும் ஒன்று அல்லது இரண்டு வாரங்களில் தொற்று ஏற்பட்ட நோயாளர்களின் சரியான எண்ணிக்கையை அறிந்து கொள்ள முடியும். அவர்களை நாங்கள் பிரித்தொடுத்து சிகிச்சைக்கு உட்படுத்த முடியும்.

அத்துடன் தொற்று ஏற்பட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களையும் இனங்கண்டு சிகிச்சைக்கு உட்படுத்த முடியும்.
இதன் மூலம் நாம் முன்னேற்றகரமான நிலையினை அடைய முடியும். நாடளாவிய ரீதியில் உணவுப்பற்றாக்கறை ஏற்படாத இடத்தில் நாம் மிகவும் முன்னேற்றகரமான முறையில் செயற்பட முடியும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435