கொவிட் 19 கட்டுப்பாட்டு நடவடிக்கையிலிருந்து விலகுவார்களா?

பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் மத்திய நிறைவேற்றுக்குழு இன்று பிற்பகல் 4 மணிக்கு கூடவுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையிலிருந்து நாளை முதல் விலகுவது தொடர்பான, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து இதன்போது ஆராயப்படவுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மஹிந்த பாலசூரிய, கொவிட் 19 தொற்றினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் சுகாதார பரிசோதகர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடியதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த கலந்துரையாடல் ஊடாக இரு தரப்பினருக்கும் இடையில் பல இணக்கப்பாடுகள் எட்டப்பட்டன.

இந்த நிலையில் சங்கத்தின் மத்திய குழு இன்று கூடி ஆராயவுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மஹிந்த பாலசூரிய தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435