கொவிட் 19 காரணமாக மத்திய கிழக்குநாடுகளில் பலியான இலங்கையர்கள்

உலக நாடுகளை ஸ்தம்பிக்கச் செய்த புதிய கொவிட் 19 வைரஸ் காரணமாக அதிகமான பாதிப்புகள் ஏற்பட்டாலும் புலம்பெயர் தொழிலாளர்கள் பெரும் இக்கட்டான சூழ்நிலைக்கு இன்று வரை முகங்கொடுத்து வருகின்றனர். தொழில் நாடி மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்ற 23 இலங்கையர்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர் என்று இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் டெய்லி மிரர் ஆங்கில தேசிய நாளிதழுக்கு தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் பணியாற்றிய 8 இலங்கையரும், குவைத்தில் பணியாற்றிய 7 பேரும் சவுதி அரேபியாவில் பணியாற்றிய 6 பேரும் ஓமானில் பணியாற்றிய இருவரும் இதுவரை புதிய கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கு பலியாகியுள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர்களில் எத்தனை வீட்டுப் பணிப்பெண்கள் இறந்துள்ளனர் என்ற தகவல் இன்னும் கிடைக்கவில்லை. எத்தனை ஆண்கள், எத்தனை பெண்கள் இறந்தார்கள் என்ற தகவல் எம்மிடம் இல்லை என பணியகத்தின் பேச்சாளர் மங்கள ரந்தெனிய தெரிவித்தார்.

மார்ச் மாதம் தொடக்கம் இப்போது வரை இம்மரணங்கள் இடம்பெற்றுள்ளன. இவர்களது மரணங்கள் குறித்து அவர்களுடைய நெருங்கி உறவினர்களுக்கு அறிவித்துள்ளோம். தற்போதைய நிலைமைக் குறித்த விளக்கப்படுத்தியுள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435