ஐக்கிய அரபு இராச்சியத்தில் கொவிட் 19 தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த இலங்கையர் ஒருவர் நேற்று (26) காலமானார்.
டுபாயில் அளவையியலாளராக பணியாற்றி வந்த பன்னிபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த ரசிக்க டி சில்வா என்ற இரு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் கடந்த 16ம் திகதி கொவிட் 19 தொற்றுக்குள்ளாகியிருந்தமை அடையாளங்காணப்பட்டது. அதனை தொடர்ந்து டுபாயில் உள்ள கனேடியன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானார் என்று அந்நாட்டுக்கான இலங்கை தூதரக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த நபர் குடும்பத்துடன் டுபாயில் வசித்து வந்துள்ளதுடன் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கான இலங்கை அளவையியலாளர் சங்கத்தின் அங்கத்தவராவார்.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் இதுவரை 10,349 பேர் கொவிட் 19 தொற்றுக்குள்ளாகியுள்ளனர். 76 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 1978 பேர் குணமாகியுள்ளனர் என்று அந்நாட்டு இணையதளமான ‘த நஷனல்’ செய்தி வௌியிட்டுள்ளது.
கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர்கள் சில இலங்கையர்களும் உள்ளனர் என்றும் அவர்களில் சிலர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் சிலர் குணமாகியுள்னர் என்றும் குணமாகியவர்களில் அளவையியலாளராக பணியாற்றும் தம்பதிகளும் உள்ளடங்குவர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.