கொவிட் 19 பாதிப்பால் இதுவரை 90 புலம்பெயர் இலங்கையர்கள் பலி

கொவிட் 19 காரணமாக வௌிநாடுகளில் உயிரிழக்கும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வௌிவிவகார அமைச்சு தேசிய பத்திரிகையான டெய்லி மிரருக்கு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, சவுதி அரேபியாவில் 31 பேரும், குவைத்தில் 20 பேரும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் 10 பேரும் கட்டாரில் 6 பேரும் ஐக்கிய ராச்சியத்தில் 5 பேரும் அமெரிக்கா, கனடா, ஓமான் ஆகிய நாடுகளில் தலா 4 பேரும் பஹ்ரேய்ன் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளில் தலா ஒருவரும் இஸ்ரேல் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு கொவிட் 19 தொற்றால் உயிரிழந்த சிலருடைய சடலங்கள் உறவினருடைய வேண்டுகோளுக்கிணங்க சர்வதேச சுகாதார பாதுகாப்பு தரங்களுக்கமைவாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. இறுதிச் சடங்கிற்கு நெருக்கமான உறவினர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டதுடன் உடனடியாக அருகிலுள்ள தகனச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சடலங்கள் எரியூட்டப்பட்டன என்றும் வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொவிட் 19 தொற்று காரணமாக வௌிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இலங்கை புலம்பெயர் பணியாளர்களை நாட்டுக்கு அழைத்து வரும் பணிகள் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளன. இதுவரை 125 நாடுகளைச் சேர்ந்த 44,033 பேர் தாய்நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்களில் 17,600 பேர் மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களாவர். இன்னும் 56,000 இலங்கையர்கள் நாடு திரும்ப எதிர்பார்த்துள்ளதாக வௌிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

மூலம் – டெய்லி மிரர்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435