கொவிட் 19 – பாதுகாப்பற்ற நிலையில் புலம்பெயர் தொழிலாளர்கள்

புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அழைத்துச் செல்ல மறுக்கும் நாடுகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய அரபு அமீரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அமீரகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சூப்பர் மார்க்கெட்டுகள், ஹொட்டல்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் மட்டும் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் மற்ற தொழிற்சாலைகள், நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

இதனால் ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேலையிழந்ததுடன் தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கின்றனர்.

சில நாடுகள் தங்கள் நாட்டவர்களை சிறப்பு விமானம் மூலம் அழைத்தாலும், பல நாடுகள் மறுப்பதாக தெரிகிறது.

இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், ஊரடங்கால் வேலை இழந்து தவிப்பவர்கள், விடுப்பில் உள்ளவர்கள் என புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பல்வேறு நாடுகள் அழைத்துச் செல்ல மறுக்கின்றன.

தாயகம் திரும்ப அனுமதிக்காவிட்டால் அந்த நாடுகளுடனான தொழிலாளர் உறவுகளை மறுபரிசீலனை செய்வோம், அந்த நாடுகளுக்கான பணி விசாக்கள் ஒதுக்கீட்டில் கடுமையான நடைமுறைகளும் பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம் -கத்தார் நியுஸ்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435