தற்போதைய நிலைமையைக் கருத்திற்கொண்டு சிங்கப்பூரில் பணியாற்றும் ஆங்கில மொழி புலமையற்ற புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் சுகாதார சேவையாளர்களுக்கும் இடையிலான இடைவௌியை குறைக்கும் வகையிலான இணைய பக்கமொன்றை சிங்கப்பூர் மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.
சிங்கப்பூரில் புலம்பெயர் தொழிலாளர்களே அதிகமாக கொவிட் 19 தொற்றுக்குள்ளாகின்றனர். எனினும் அவர்கள் மருத்துவ உதவியை நாடும் போது அவசியமான கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு மொழி பிரச்சினையே காரணம். இதனால் தொழிலாளர்கள் பாதிப்படைவதுடன் மருத்துவர்களும் தங்களுடைய சேவையை சரிவர வழங்க முடியாதுள்ளது. இந்நிலைமையை கருத்திற்கொண்டு வைத்திய சேவையை பெற்றுக்கொள்வதற்கான அடிப்படை கேள்விகளடங்கிய இணைய பக்கத்தை இம்மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.