கோட்டையில் தொடரும் மலையக இளைஞர்களின் உணவு தவிர்ப்பு போராட்டம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் வேண்டும் என வலியுறுத்தி கொழும்பு – புறக்கோட்டை தொடருந்து நிலையத்துக்கு முன்னால் இரண்டு இளைஞர்கள் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

எந்த குழுக்களின் பின்புலமும் இன்றி, தன்னெழுச்சியாக இந்த போராட்டம் நடத்தப்படுவதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.

தொழிலாளர்களது நாளாந்த அடிப்படை சம்பளம் 1000 ரூபாவாக அதிகரிக்க வலியுறத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

உதயன் மற்றும் அசோக் என்ற இளைஞர்களினால் முன்னெடுக்கப்படும் இந்தப் போராட்டத்துக்கு தற்போது மேலும் சிலரும் ஆதரவு தெரிவித்து வருகின்;றனர்.

இவர்களின் போராட்டம் இன்று நான்காவது நாளாகவும் தொடர்கிறது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435