கோவிட் 19 – முகக்கவசம் தைக்கும் பணிகளில் SWOAD நிறுவனம்

கோவிட் 19 தொற்றுகாரணமாகஅதிகளவாகபயன்படுத்தப்படும் முகக் கவசங்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை கவனத்திற் கொண்டு அம்பாறை மாவட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர் சங்கங்களின் ஊடாக முகக்கவசங்களை தயாரிக்கும் பணியில் அம்பாறை மாவட்ட சமூகநல்வாழ்வு அமைப்பு–SWOAD நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

அம்பாறைமாவட்டசெயலகத்தின் வழிகாட்டலுடன் USAID – Global Communities நிறுவனத்தின் SCORE செயற்திட்டத்தின் கீழ் புலம்பெயர் தொழிலாளர்கள் சங்கங்களில் தையல் தொழில்களில் ஈடுபடுகின்றபுலம்பெயர் தொழிலாளர்களைப் பயன்படுத்தி 5000 முகக்கவசங்கள் தைக்கப்பட்டு மாவட்டமட்டத்தில் விநியோகிக்கப்பட்டதாக SWOAD நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் க.பிறேமலதன் தெரிவித்தார்.

SWOAD நிறுவனமானது நாட்டிற்கு மீள் திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் தற்போது வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களின் குடும்பங்களுக்கு பல்வேறு வாழ்வாதார மற்றும் பொருளாதாரமேம்பாட்டுக்கான அடித்தளத்தை வழங்கிவரும் ஒருநிறுவனமாகும். தற்போது SWOADநிறுவனத்தினால் அம்பாறைமாவட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ள 30 புலம்பெயர் தொழிலாளர்சங்கங்கள் உருவாக்கபட்டிருப்பதுடன் சுமார் 1200 மேற்பட்ட அங்கத்தவர்களைக் கொண்டு பல்வேறு பொருளாதாரநடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

மேலும் புலம்பெயர் தொழிலாளர் சங்கங்களின் ஊடாக விரைவில் இன்னும் 10,000 முகக்கவசங்களைதைக்கும் பணியை ஆரம்பிக்க திட்டமிட்டிருப்பதுடன் 2000 வறிய புலம்பெயர் தொழிலாளர்களின் குடும்பங்களக்கு உலர் உணவுப் பொருட்கள் மற்றும் 3000 குடும்பங்களுக்கு வீட்டுத்தோட்டத்தை ஊக்குவிக்கும் முகமாக அதற்கான மரக்கறிவிதைகள் வழங்க திட்டமிட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ள பிறேமலதன், வீட்டுத்தோட்டத்திற்கான வழிகாட்டி கையேடு,  கொவிட் 19 பாதுகாப்பு கையேடு என்பனவற்றையும் வழங்க திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

 

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435