சடலங்களை அடக்கம் செய்வதற்கான உறைகள் 1,000 எதற்காக?

சடலங்களை அடக்கம் செய்வதற்காக பயனபடுத்தப்படும் (Body Bags) ஆயிரம்  உறைகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமை கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு செயற்றிட்டத்தில் ஆயிரம் பேர் வரை உயிரிழப்புக்கள ஏற்படக்கூடும் என்ற எதிர்பார்ப்புடன் அல்ல என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

சடலங்களை அடக்கம் செய்வதற்காக பயன்படுத்தப்படும் (Body Bags)  உறைகளை செஞ்சிலுவை சங்கத்திடம் பெற்றுக்கொள்வற்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கை தொடர்பாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு விளக்கமளித்துள்ளார்.

சடலங்களை அடக்கம் செய்வதற்காக பயன்படுத்தப்படும் (Body Bags) உறைகள் மாத்திரமின்றி சுகாதார அமைச்சின் விநியோக பிரிவினால் மருந்து வகைகள்< உபகரணங்கள் முதலானவற்றின் கையிருப்பை உரிய முறையில் முன்னெடுக்கும் நோக்கில் செஞ்சிலுவை சங்கத்திடம் Body Bags பெற்றுக்கொள்வற்கு கிடைத்துள்ள இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளும் பொருட்டு அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விசேடமான சூழ்நிலைகள் மற்றும் அனர்த்தங்களின் போது பூதவுடல்களின் இறுதிக்கிரிகைகளுக்காக இவ்வாறான பொதிகள் பயன்படுத்தப்படுவது வழமை .அதற்கேற்பவே இவற்றை பெற்றுக்கொள்ள இந்த நடவடிக்கை என்றும் அவர் கூறினார்.

இலங்கையில் தற்போது கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மிகக் குறைவு. அதேபோன்று இறப்பு வீதமும் குறைவு. இதற்குக்காரணம் எமது சுகாதார துறையினர் முன்னெடுத்துவரும் அர்ப்பணிப்புடனான சேவையாகும் என்று விசேட வைத்திய நிபுணர்; தெரிவித்தார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தாலும் குறித்த பகுதிகளில் வைரஸ் பரவாமல் இருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எமது சுகாதார பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர் என்றும் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க மேலும் தெரிவித்தார்.

நன்றி – News.lk

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435