சட்டப்படிவேலை மீண்டும் பணிப்புறக்கணிப்பாக மாறும்: சுங்கப் பணியாளர்கள் எச்சரிக்கை

தமது கோரிக்கைக்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டால், சட்டப்படி முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கையை எதிர்வரும் நாட்களில் பணிப்புறக்கணிப்பாக முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக சுங்க ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சுங்கப் பணியாளர்கள் முன்னெடுக்கும் சட்டப்படி வேலையின் காரணமாக, அத்தியாவசிய பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்றும் அந்த சங்கத்தினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

சுங்கத் திணைக்களப் பணிப்பாளராக கடமையாற்றி, பீ.எஸ்.எம். சார்ள்ஸை அந்தப் பதவியிலிருநு;து நீக்கி, ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி ஒருவரை நியமித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து சுங்கத் திணைக்கள பணியாளர்கள் கடந்த 29 ஆம் திகதி பிற்பகல் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்தனர்.

இதன் காரணமாக சுங்க திணைக்களத்திற்கு சுமார் 3 பில்லியன் ரூபா அளவில் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்க்பட்டுள்ளது.

சுங்கப் பணியாளர்கள் முன்னெடுக்கும் சட்டப்படி வேலையின் காரணமாக அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என அத்தியாவசிய பொருட்கள் இறக்கமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அந்த சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் ஹெமக்க பெர்னாண்டோவினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்கள் இறக்கமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கத்தி;ன் பொருட்கள் சுங்கத்திலிருந்து விடுவிக்கப்படுவதில் தாமத நிலைமை ஏற்பட்டுள்ளது.

வெங்காயம், உருளைக்கிழங்கு மற்றும் குளிரூட்டப்பட்ட பொருட்கள் மிகவும் குறைந்த அளவிலேயே துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்படுகிறது.

இதேநேரம், உலருணவுப் பொருட்கள் விடுவிக்கப்படுவதும் குறைவடைந்துள்ளது.

இதன் காரணமாக சந்தையில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என அத்தியாவசிய பொருட்கள் இறக்கமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கத்தின் செயலாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435