சமய பாட ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக விண்ணப்பம் கோரி நடாத்தப்படவிருந்த போட்டிப்பரீட்சை தொடர்பில் புதிய வர்த்தமானி அறிவித்தல்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
அண்மையில் கல்வியமைச்சில் நடைபெற்ற சமய விவகார ஆலோசனை குழுக்கூட்டத்தில் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. அதற்கமைய, கடந்த ஓகஸ்ட் மாதம்31ம் திகதி வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கமைய ஆட்சேர்ப்பு மேற்கொள்வதற்கும் அதன் பின்னர் இணைக்கப்பட்ட அனைத்து திருத்தங்களையும் ரத்து செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத்தீர்மானமானது அனைத்து சமய பாட நியமனங்களுக்கும் பொதுவானதாக காணப்படுவதுடன் விரைவில் பரீட்சை நடாத்தப்பட்டு நியமனங்கள் வழங்குவதற்கான நடவடிக்கைள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியமனத்திற்கு விண்ணப்பிப்பதற்கான வயதெல்லை 35 ஆகும். விண்ணப்பங்களை அனுப்புவதற்கான இறுதித் திகதி 28.02.2019 ஆகும்.