சமூகத்தில் ஒருவருக்கு கொரோனா: இலங்கையில் இரு பகுதிகளில் ஊரடங்கு

கம்பஹா – திவுலபிடிய பிரதேசத்தைச்சேர்ந்த 39 வயதான பெண் ஒருவர் கொவிட் 19 தொற்று நோயாளர் என அடையாளம் காணப்பட்டு தற்போது அவர் IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெவ வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் ,இந்தப் பெண் காய்ச்சல் நோயின் காரணமாக கம்பஹா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் அங்கிருந்து நோய் குணமடைந்த பின்னர் வீட்டுக்கு அனுப்பப்பட்டபோது மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் இவர் கொவிட் 19 தொற்று நோயாளர் என அடையாளங்காணப்பட்டுள்ளார்.

இதற்கமைவாக கம்பஹா வைத்திய சாலை பணியாளர்கள் சுமார் 15 பேரும் இந்தப் பெண் பணிபுரிந்த தனியார் நிறுவனத்தைச் சேர்நத சுமார் 40 பேரும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் இந்தப்பகுதியில் அயலவர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளதுடன் இந்தப் பெண்ணுக்கு கொவிட் 19 ஏற்பட்ட முறை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

இந்தப்பகுதியில் அயலவர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் PCR பரிசோதனை பெறுபேறுகளுக்கு அமைவாக தேவையான மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இந்த வேளையில் பொது மக்கள் மிகவும் அவதானத்துடன் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று சுகாதார பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, திவுலுப்பிட்டிய மற்றும் மினுவாங்கொடை ஆகிய பொலிஸ. பிரிவுகளில் உடன் அமுலுக்கு வரும் வகையில் மறு மீள அறிவிக்கும் வரையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதுதொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435