
கட்டாரில் சமூகவலைத்தளங்களை பயன்படுத்துவது தொடர்பில் அந்நாட்டு தொலைத் தொடர்பு கட்டுப்பாட்டு அதிகாரசபை புதிய நடைமுறைகளை அறிவித்துள்ளது.
சமூக வலைத்தளங்களுக்கு பிரவேசித்தல், தகவல் பரிமாற்றம் என்பவற்றை கவனத்திற்கொண்டே இப்புதிய நடைமுறைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
நாட்டின் கலாசாரத்திற்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாத வண்ணமும், மக்களின் உணர்வுகளை தூண்டும் வகையிலான மற்றும் சட்ட ரீதியாக தண்டனை பெறக்கூடிய வகையிலான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்வது சட்டவிரோதமான செயலாக கொண்டு தண்டனை வழங்கப்படும் என்று அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் இளவயதினருக்கு அவ்வாறான செயல்களை மேற்கொள்வதற்கு சமூக வலைத்தளங்களில் பிரவேசிக்க அனுமதி வழங்குவதும் சட்டபடி குற்றமாகும்.
குறித்த அப்களை தரவிறக்கம் செய்துக்கொள்வதனூடாக தனிப்பட்ட தகவல்கள் சூறையாடப்படுவதாகவும், வைரஸ்கள் பரப்பப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ள அவ்வதிகாரசபை முடிந்தளவு உத்தியோகப்பூர்வ இணையதளங்களுக்கு மட்டுமே பிரவேசிக்குமாறு சுட்டிக்காட்டியுள்ளது.
இது தொடர்பில் தெளிவுபடுத்தும் நிகழ்வுகளையும் அவ்வதிகாரசபை மேற்கொண்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் முறைப்பாடுகள் இருப்பின் கட்டார் தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு அதிகாரசபையிடம் வழங்க முடியும்.
புலம்பெயர் தொழிலாளர்களாகிய நீங்கள் இவ்விடயம் தொடர்பில் கவனமாக செயற்படுவீர்களாயின் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்த்துக்கொள்ள முடியும்.
வேலைத்தளம்