வர்த்தக அல்லது தயாரிப்பு நிறுவனங்களில் பணியாற்றும் நிரந்தர ஊழியர்களின் உரிமையை பாதுகாப்பதற்கான சம்பள கட்டளைச் சட்டத்தின் 59ஆவது சரத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
ஏதேனும் வர்த்தக நிறுவனத்தின் தயாரிப்பு அல்லது சேவை பணிக்காக ஒப்பந்த ஊழியர்களை சேவையில் ஈடுபடுத்துவதன் மூலம் அந்த நிறுவனத்தில் நிரந்தர சேவையில்; ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு நிலையை தடுத்து அவர்களது உரிமையைப் பாதுகாப்பதற்காக சம்பள கட்டளைச் சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தவே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கமைவாக சட்டத்திருத்த தயாரிப்புப் பிரிவினால் தயாரிக்கப்பட்டுள்ள திருத்த சட்டத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் அதனைத் தொடர்ந்து அனுமதிக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் அமைச்சரவை அந்தஸ்து அற்ற தொழில் மற்றும் தொழிற் சங்க தொடர்பு அமைச்சரின் கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.